Tuesday, June 24, 2008
இதயம்
உயிர் உள்ள வரை
மறக்க மாட்டேங்குது இதயம்,
ஒவ்வொரு நொடியும் உன்னையே
பார்த்து கொண்டிருக்கிறேன் இதயத்தில்
எவ்வாறு முடியும் மறக்க.
பார்க்காமல் இருக்கமுடியாது
யாரையும் அப்போ பதியாமல்
இருக்க முடியுமா இதயத்தால்?
Tuesday, June 17, 2008
யார் பெரியவன
நான் தான் பெரியவன் தம்பி.
ஒரு தடவை பற்ற வைத்தாலே
கடைசிவரை ஒளி கொடுப்பவன் நான்.
எத்தனை தடவை பற்ற வைத்தாலும்
கடைசிவரை ஒளி கொடுப்பவன் நான்.
நான் என்னையே உருக்கிகொள்வதால்
இறைவன் உருகி ஏற்றுக் கொள்வான்.
நி உருகி இறைவனை அடைகிறாய்
நானே இறைவனாக காட்சியாகிறேன்.
உங்களை கொடுமையான கடுமையான
நெருப்பால் உருக்கி செய்வார்கள்.
அதிகமான துன்பத்தை ஏற்பதால்
அதிக நாட்கள் அழியாமல் இருக்கிறேன்.
நீங்கள் அதிக நாட்கள் இருப்பதால்
அதிகமான பாவத்தை சம்பாதிக்கிறீர்கள்.
நான் சென்று கொன்றால் பாவம்அ
வர்களே வந்து வெந்து இறந்தால்.
எனக்கு யாரும் எண்ணை
ஊற்றவும் தீண்டவும் வேண்டியதில்லை.
நி இரவில் மட்டுமே பயன்படுகிறாய்
நான் இரவிலும் விழாக்கலிலும் பயன்படுகிறேன்.
நான் என்னையே ஒளியாக கொடுப்பவன்
நீங்களோ எண்ணையை ஒளியாக கொடுப்பவர்.
நான் அழியாமல் ஒளி கொடுப்பவன்அ
தனாலேயே நிலையாக இருப்பவன்.
நீயும் தான் பெரியவன் மெழுகுவர்த்தி தம்பி
நீங்கள் தான் பெரியவர் குத்துவிளக்கு அண்ணா.
நம்பிக்கை
நம்பிக்கை
இல்லாததை இருப்பதாகவும்
கொண்ட நம்பிக்கைக்கு தக்க
பலனை தரும் நப்பிக்கை.
மண்னுக்குள் பொன் இருக்கும்
என உழுது விதைக்கிறான்
உழவன் பயிரின் வேர்வழியாக
மண்னில் உள்ள பொன்னெல்லாம்
பூத்து காய்த்து கனிந்து
உழவனின் கையில் பொன்னாகிறது.
மனைவி தனக்கு ஏதோ
தீங்கு செய்வதாக
நினைக்கிறான் கணவன்
மனைவியோ மகாலெச்சுமி
அவனின் மனதிலோ மூதேவியாய்.
கொண்ட நம்பிக்கைக்கு தக்க
பலனை தரும் நப்பிக்கை
இருப்பதை இலாததாகவும்
இல்லாததை இருப்பதாகவும்.
பிரார்த்தனை
நமக்கு நாமே பேசி
நம் மனதில்
நமக்கு வேண்டியதை
நமே ஆசைபட்டு
நம்மிடமே அதை
நாமே சொல்லி
நமக்கு நாமே
நப்பிக்கையை
நாடும் நம்பிக்கை.
நாலெழுத்து படித்தவன்
கிராமத்தில் வாழ
வயல் உண்டு
தோட்டம் உண்டு
விளை நிலம் உண்டு
தொழிலதிபர்கள் உண்டு
வியாபாரிகள் உண்டு
வேலையாட்கள் உண்டு
இங்கு வாழ
இவனுக்கு மட்டும்
இல்லையாம் வேலை இவன்
நாலெழுத்து படித்தவன்.
திருவிழா அழைப்பிதழ்
வந்துவிட்டது வைகாசி
திருமாலின் அவதாரமான
இராமபிரானை வணங்க
வாருங்கள் ஊருக்கு.
இராமசாமி கோவில்
உள்ள ஊர்களிலெல்லாம்
திருவிழாதான் வில்லு பாட்டும்
நாதஸ்வர கச்சேரியும்
பார்த்து கேட்டு மகிழுந்து
இராமபிரானின் ஆசியை பெற்று
இராமாயணத்தில் வரும்
நல்லோர்களின் கதையை கேட்டு
நாமும் நல்லோராய் மாற முயற்சி செய்வோம்.
மாற்றம்
தெய்வத்தை பார்க்க மட்டுமா
என் தேவதையையும் பார்க்கத்தான்
ஆனால் இன்றோ கோவிலில்
கொடை நடக்குது நானோ
தெய்வம் எங்கும் நிறைந்துள்ளது
என விட்டிலேயே இருந்துவிட்டேன்
தேவதையின் பால் உள்ள நல் எண்ணத்தால்.
நினைப்பு
நிலவு நான் என
நி நினைப்பாய் என
நான் நினைத்தேன்.
உன்னை கண்ட
சந்தோசத்தால் பௌர்ணமியாகவும்
உன்னை காணாத
துக்கத்தால் அமாவாசையாகவும்
உனக்காகவே நான்
வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்கிறேன் என
நி நினைப்பாய் என
நான் நினைத்தேன்.
ஆனால் நியோ
சிறு ஒளி கொடுக்கும்
கோடானகோடி நச்சத்திரத்தில்
ஒன்றாய் என்னை
நினைத்து விட்டாயே
நினைப்பு
நம்பிக்கை
தனக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்
என்ற நம்பிக்கையாலேயே
முளைக்கின்றது.
பாம்பு
தனது சட்டை வளரும்
என்ற நம்பிக்கையாலேயே
சட்டையை கழற்றுகிறது.
இயற்கை
தன்னை மனிதன் பாதுகாப்பான்
என்ற நம்பிக்கையாலேயே
செல்வத்தை வழங்குகிறது.
மனிதன்
அடுத்த நொடியும் வாழ்வோம்
என்ற நம்பிக்கையாலேயே
வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
இயற்கை
அருவி இயற்கை.
அருவித் தண்ணீர் ஓடும்
ஆறு இயற்கை.
ஆற்றுத் தண்ணீர் சேரும்
கடல் இயற்கை.
கடல் தண்ணீரிலிருந்து உருவாகும்
மேகம் இயற்கை.
மேகம் குளிர்ந்து பெய்யும்
மழை இயற்கை.
மழை தண்ணீர் விழும்
அருவி இயற்கை.
ஆரம்பமும் முடிவும்
ஒன்றான்து இயற்கை.
தலைவர்கள
நல்ல மனிதர்கள்,
நல்லதையே செய்தவர்கள்,
தனக்காக மட்டுமல்லாமல்
பிறருக்காக வாழ்ந்தவர்கள்.
மக்கள் நன்றாக வாழ
வழிவகை செய்தவர்கள்,
சொன்னது மட்டுமல்லாமல்
சொன்ன வண்ணம்
வாழ்ந்து காட்டியவர்கள்.
மக்களுக்காக வாழ்ந்தவர்கள்,
மக்கள் மனதில்
நீங்கா
இடம் பெற்றவர்கள்.
நேற்றைய தலைவர்களின்
எதிர் மறையாய்
இன்றைய தலைவர்கள்,
தனக்காக மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைய தலைவர்கள்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
பணம் என்னும் புல்லை
தின்னா நிஜ புலிகள்.
இன்றைய தலைவர்கள்
புலித்தோல் போர்த்திய
பசு என
பணம் மட்டுமே
வாழ்க்கை என
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தலைவர்கள்
நேற்றைய தலைவர்களாய்
மாறினால்
நாளைய பாரதம்
உலகத்தில் உள்ள
அனைத்து வல்லரசுகளிலும்
முதல்
வல்லரசு நாடாய் வரும்.
வாழ்க்கை
வசந்தம் வீசட்டும்,
வாழ்க்கை ஒரு பூ
வசந்தம் மலரட்டும்.
வாழ்க்கை ஒரு கடல்
சந்தோச அலை அடிக்கட்டும்,
வாழ்க்கை ஒரு மேகம்
சந்தோச மழை பெய்யட்டும்.
வாழ்க்கை ஒரு கனி
மகிழ்ச்சியாக ருசிக்கட்டும்,
வாழ்க்கை ஒரு தேன்
மகிழ்ச்சியாக தித்திக்கட்டும்.
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
சந்தோசம் பூக்கட்டும்,
வாழ்க்கை ஒரு நிலா
சந்தோசமாக பிரகாசிக்கட்டும்.
ஒற்றுமை - வேற்றுமை
வேற்றுமை வெருப்பை வளர்க்கும்.
ஒற்றுமை உதவியை வளர்க்கும்
வேற்றுமை பகையை வளர்க்கும்.
ஒற்றுமை மகிழ்ச்சியை வளர்க்கும்
வேற்றுமை துன்பத்தை வளர்க்கும்.
ஒற்றுமை புகழை வளர்க்கும்
வேற்றுமை பொறாமையை வேற்றுமை.
இயற்கை
பூமிக்குள் இருக்கும் தண்ணீர் இயற்கை.
வானம் இயற்கை
வானில் தோன்றும் நட்சத்திரம் இயற்கை.
மலை இயற்கை
மலையில் தெரியும் பசுமை இயற்கை.
கடல் இயற்கை
கடலில் வரும் அலை இயற்கை.
காற்று இயற்கை
காற்றால் வாழும் உயிர் இயற்கை.
சூரியன் இயற்கை
சூரியனால் ஏற்படும் வெளிச்சம் இயற்கை.
மேகம் இயற்கை
மேகத்திலிருந்து வரும் மழை இயற்கை.
வானவில் இயற்கை
வானவில்லில் உள்ள நிறம் இயற்கை.
பூ இயற்கை
பூ வீசும் வாசம் இயற்கை.
அழகு இயற்கை
அழகு இன்றென்றும் குறையாததே இயற்கை.
வாழ்க்கை இயற்கை
வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயற்கை.
சிறந்த ஆசிரியர்
பெற்ற தாய்
சிறந்த ஆசிரியர்.
படிக்கும் மாணவனுக்கு
சொல்லிகொடுக்கும் குரு
சிறந்த ஆசிரியர்.
வாழும் மனிதனுக்கு
அவனது அனுபவமே
சிறந்த ஆசிரியர்.
அறியாமை
உதிக்கத்தான்.
நிலா தேய்வது
வளரத்தான்.
பகல் இரவாவது
விடியத்தான்.
துன்பம் வருவது
கற்றுக்கொள்ளத்தான்.
பூவுக்கு கடிதம்
பூவும் நானும் ஒன்றே
பூவை சூடுவது போல்
என்னையும் சூடிகொள்வாயா.
பூவே
பூவும் நானும் ஒன்றே
பூவோடு சேர்ந்த
நாரும் மணக்கும்
உன்னோடு சேர்ந்து
நானும் மணப்பேனா.
பூவே
பூவும் நானும் ஒன்றே
பூ சூரியனை பார்த்தவுடன்
மலரும் நான்
உன்னை பார்த்து
முகம் மலர்வேனா.
பூவே
பூவும் நானும் ஒன்றே
பூவை சரம் சரமாக
கட்டுவார்கள்
நான் உன்னை
கட்டிக்கொள்ள
சம்மதிப்பாயா.
காதல்
அத்தனை துயரமும்
வருவது ஏழைக்கு
மட்டும் அல்ல
காதலிப்பவருக்கும் தான்.
காதல் ஒரு
சுகமானமரண படுக்கை.
குட்டி குட்டி பிள்ளையிலே
குட்டி குட்டி சிலேட்டில்
குட்டி குட்டியாக எழுதினேன்
குட்டி சந்தோசம் பெற்றோர்க்கு.
குட்டி குட்டி அடம்பிடிப்பேன்
குட்டி ஊட்டுவாள் அம்மா.
குட்டி குட்டி தவறு செய்வேன்
குட்டி திருத்துவார் அப்பா.
குட்டி குட்டி படித்தேன்
குட்டி பள்ளிகூடத்திலே.
குட்டி குட்டி செலவுக்காக
குட்டி பணம் தருவாள் தாய்.
குட்டி குட்டி உண்டியலில்
குட்டி மீதத்தை சேமித்தேன்.
குட்டி குட்டி நிலா வானில்
குட்டி வெளிச்சம் பூமியில்.
குட்டி குட்டி சாதனை செய்வோம்
குட்டி குட்டி வயதினிலேயே.
நிலவும் மேகமும்...
மேகம் நான்
பிரகாசிக்கிறாள் அவள்
பின் தொடர்கிறேன் நான்.
தேய் பிறை என
தேய்கிறாள் அவள்
சாரல் என
சினுங்கினேன் நான்.
அமாவாசை என
மறைந்தாள் அவள்
புயல் என
அழுதேன் நான்.
வளர் பிறை என
வளர்கிறாள் அவள்
மழை என
ஆனந்தத்தில் நான்.
பௌர்ணமி என
பிரகாசமாய் அவள்
வெள்ளை மேகம் என
கானாமல் போன நான்.
கல்வி
அனைத்து அறிவையும்
வளர்ப்பதற்க்கு
அனைத்து செயலையும்
சிந்தித்து செய்வதற்க்கு
அனைத்து மொழியையும்
எழுதி படிப்பதற்க்கு
அனைத்து மனிதர்களுடனும்
பேசி பழகுவதற்க்கு
அனைவருக்கும் தேவை
வாழ்க்கை வாழ்வதற்க்கு
அனைவரும் கற்ப்போம்
தேவையான கல்வியை.
அழகு
தான் பெற்ற
பிள்ளைகள்
என்ன செய்தாலும்
அழகு.
தந்தைக்கு
பிள்ளைகள்
நல்லதை செய்தால்
அழகு.
உடன் பிறப்புக்கு
நல்லதை செய்யும் போதும்
இன்பமாக இருக்கும் போதும்
அழகு.
உறவினர்களுக்கு
உதவி செய்யும் போதும்
விழாக்களுக்கு அழைக்கும் போதும்
அழகு.
நண்பர்களுக்கு
ஒன்றகவே இருந்து
நல்லது கெட்டதில்
பங்கு கொண்டால்
அழகு.
மொத்தத்தில்
அவைவருக்கும்
நல்லது செய்வது தான்
அழகு.
தேவை
தேவை
நன்றாக உழைத்து
நன்றாக கவனித்துக்கொள்ளும்
கனவன்.
மண மகனுக்கு
தேவை
அழகுடன் கூடிய
அடக்கமும்
அமைதியும் கொண்ட
மனைவி.
மண மகனின்
பெற்றோர்க்கு தேவை
தன் மகனோடு
தங்களையும்
தங்கமாக தாங்கும்
மருமகள்.
மண பெண்ணின்
பெற்றோர்க்கு தேவை
மகளை சந்தோசமாக
வைத்திருக்கும் மருமகன்
மட்டுமல்லாமல் அடிக்கடி
அதை கொடு, இதை கொடு
என கேட்காத சம்பந்தமும்.
ஏக்கம்
எப்படி
பணத்தை சேர்ப்பது
என ஏங்குகிறான்.
பணக்காரன்
சேர்த்துவைத்த பணத்தை
எப்படி காப்பது
என ஏங்குகிறான்.
உன் பார்வை
உன் பார்வை
பனி கட்டி
நான் உறைந்தேன்
நி காட்டிய அன்பால்.
உன் பார்வை
மழை
நான் நனைகிறேன்
உன் பாசத்தால்.
உன் பார்வை
நிலவு ஒளி
பிரகாசமாக இருக்கிறேன்
உன் அருகில்.
உன் பார்வை
தீ
நான் எரிகிறேன்
உன்னை கணாததால்.
உன் பார்வை
தேன் கூடு
என்னை கொட்டுகிறதே
உன் நினைவு.
வரதட்சனை
ஒரு ரூபாய்
வாங்குவாள்
பள்ளிகூடம் போவதற்க்கு.
தினம்
பத்து ரூபாய்
வாங்குவாள்
கல்லூரிக்கு போவதற்க்கு.
தினம்
ஐம்பது ரூபாய்
தருகிறாள்
வேலைக்கு போவதால்.
தினம்
ஒரு ரூபாய்
பத்து ரூபாய்
என வாங்கியவள்
தினம்
ஐம்பது ரூபாய்
தரும் வேளையில்
மொத்தமாக
ஓரிரு இலெட்ச்சம்
கொடுத்தால் தான்
போவாளாம்
புகுந்த வீட்டிற்க்கு.
பிறகு
பிறகு
என்ன செய்யலாம்
என நினைப்பவன்
புத்திசாலி.
பிறகு
செய்யலாம்
என தள்ளிபோடுபவன்
சோம்பேறி.
பிறகு
பார்ப்போம்
என சொல்பவன்
ஏமாற்றுக்காரன்.
பிறகு
என கோபத்தை
தள்ளிபோடுபவன்
கெட்டிக்காரன்.
சிந்தனை
கல்லை சிற்ப்பமாக்குகிறது.
எழுத்தாளரின் சிந்தனை
காகிதத்தை புத்தகமாக்குகிறது.
விஞ்ஞானியின் சிந்தனை
இல்லாததை கண்டுபிடிக்கிறது.
மனிதனின் சிந்தனை
அவனை வளர்க்கின்றது.
பழிக்குப் பழி
இயற்கையை அழிக்கின்றான்
இயற்கை
மனிதனை அழிக்கின்றது
நாம்
பிறருக்கு அளித்தால்
பிறர்
நமக்கு அளிப்பார்கள்
நாம்
பிறரை அழித்தால்
பிறர்
நம்மை அழிப்பார்கள்
மரம் வளர்த்தால் மழை வரும்
மேகத்திலிருந்து தண்ணீராக
மரத்தை வெட்டினால் மழை வரும்
நம் கண்களிருந்து தணீர்க்காக.
கவிதை
கலந்தால் தித்திப்போடு
ஆற்றலும் கிடைக்கும்
அதை உண்பவர்களுக்கு
மெய்யோடு பொய்யும்
கலந்தால் தித்திப்போடு
புத்துணர்ச்சியும் கிடைக்கும்
கவிதையை வாசிப்பவர்களுக்கு.
பெண் வீட்டுக்காரர்
கொடுக்க கொடுக்க
தர்ம சிந்தனை வளரவில்லை
கொடுக்க கொடுக்க
புகழ் பெறவில்லை
கொடுக்க கொடுக்க
கடன் அடைய(முடிய)வில்லை
கொடுக்க கொடுக்க
கொடு கொடு என்கின்றனர்
கொடுத்து கொண்டேயிருப்பவர்
பெண் வீட்டுக்காரர்
உன் பார்வை
மின்னல்
உன் பார்வை
பட்டவுடன்
என் இதயம்
எரிந்து இன்று
என்னிடம் இல்லையே.
உன் பார்வை
தென்றல்
என நினைத்தேன்
ஆனால்
புயலாய் என்னை
புரட்டி போட்டதே.
உன் பார்வை
சுனாமி
ஒரே பார்வையால்
என் மனதை
ஒரே நொடியில்
இழுத்து கொண்டதே.
வாழ்க்கை
எப்போதும் பெளர்ணமியாய்
எப்போதும் அமாவாசயாய்
எப்போதும் வளர்பிறையாய்
எப்போதும் தேய்பிறையாய்
இருப்பதில்லை.
நமது வாழ்க்கையும்
எப்போதும்
ஒரே நிலையில்
இருப்பதில்லை.
நண்பர்கள்
பாசத்தை விட
அதிகமான
பாசத்தை காட்டுபவர்கள்
அப்பா
நால்வழி படுத்துவதை விட
அதிகமாக
நல்வழி படுத்துபவர்கள்.
காதலி செலுத்தும்
அன்பை விட
அதிகமான
அன்பை செலுத்துபவர்கள்.
மனைவியிடம் உள்ள
உரிமையை விட
அதிகமாக
உரிமை கொண்டடுபவர்கள்.
மொத்தத்தில்
அனைவரையும் விட
அக்கறை கொண்டவர்களே
நண்பர்கள்.
புதுக் கவிதை
புதுக் கவிதை தான்
அவளது வீட்டில்
மாப்பிள்ளை பார்த்தவுடன
என்னை மறந்து விடுங்கள
என என்னிடம் ஒரே
வரியில் அவள் சொன்னதால்.
எதிர் மறை
பார்க்காமல் இருக்க முடியவில்லை என்னவளை
முன்னால் சென்றாள் அவள்
பின்னால் சென்றேன் நான்
பயந்து வேகமாக சென்றாள்
தைரியமாக போனேன் பின்னால்
பார்த்தேன் பலதடவை அவளை
பார்க்கவில்லை ஓருதடவை கூட என்னை
சென்றது நாள் வாரங்களாக
செல்லவில்லை அவள் என் நினைவிலிந்து
அமைதியாக பார்த்தாள் திரும்பி
அமைதியில்லாமல் தவிக்கும் என்னை
நிம்மதியில்லாமலும் தூங்காமலும் நான்
நிம்மதியாகவும் தூங்காமலும் அவள்
நேரே செல்லும் அவளை
குருக்கே அழைத்தேன் நான்
சொன்னேன் என் காதலை
சொல்லாமல் தவிக்கவிட்டாள் என்னை
அழுகை வந்தது எனக்கு
சிரிப்பு வந்தது அவளுக்கு
சொன்னாள் காதலை கண்ஜாடையில்
சொல்லவியலாத ஆனந்தத்தில் நான்
கொடுத்தேன் ரோஜா அவளுக்கு
கொடுக்க வில்லை முத்தம் எனக்கு
பார்த்துவிட்டார் உறவினர் ஒருவர்
பார்க்கவில்லை நாங்கள் ஒரிருமாதம்
எதிர்த்தனர் காதலை பெற்றோர்
எதிர்க்கவில்லை நாங்கள் அவர்களை
சேரவிடாமல் தடுத்தார்கள் பெற்றோர்
செர்த்துவைத்தார்கள் நன்பர்கள் எங்களை
பிரிந்தே வாழ்ந்த நாங்கள்
சேர்ந்தே வாழ்கிறோம் திருமணத்தால்
எதிரியாக நினைத்த பெற்றோர்
ஒற்றுமைக்காக வாழ்த்தினர் எங்களை
சிந்திக்கவில்லை எப்படி காதல் வருமென்று
சிந்திக்கின்றேன் எப்படி வாழலாம் என.
அவளின் தீபாவளி
அவளது நெற்றி பொட்டு
எனக்கு பிடிக்கும் என்பதால்.
மத்தாப்பு போல் மலர்கிறது
அவளது இரு உதடுகள்
எனது வருகையை எதிர்பார்த்து,
புஷ்வாணத்தின் வண்ணங்களாய்
அவளது முகத்தில் சந்தோசம்
நான் வருவேன் என்பதால்.
தரை சக்கரமாய்அவளது
இரு கண்கள் என்னையே
தேடிகொண்டிருக்கின்றன.
வானத்தில் வெடிக்கும்
வண்ண வண்ண வெடிகளாய்
அவளது மனம் மகிழ்ச்சியில்
தீபாவளி காலையில்
என்னை பார்த்ததால்.