Tuesday, September 15, 2020

குரு வணக்கம்

யோககுடில்தந்த இறைவா போற்றி

யோககுடிலில் வாழ்ந்தும் தெரியாதவனுக்கு

யோககுடில் எதுவென உணர்த்த

யோககுடில்லமைத்த சிவயோகியே போற்றி


நிறைவாய் வாழ வழிகாட்டி

ஆழ்ந்த புரிதலைதரும் உன்பேச்சு

கேட்டவுடன் சுழிக்கும் முகம்

கேட்ககேட்க மகிழும் முகம்


உண்மையாக இறையை தேடினால்

அதற்க்கான சந்தர்ப்பத்தை தந்தஇறை

ஒன்றில் செல்கையில் அதைதாண்டி

செல்வதற்க்கான அனுபவத்தை தந்தஇறை


இறையிடமழ காட்டிணான் உன்னை

யோகத்தையடைய தந்தாய் ஐந்தை

செய்யசெய்ய புரிதலும் அமைதியும்

நன்றியில் நனைகின்றேன் உன்னால்


கொராணாகூட நன்மையே செய்தது

நேரலையில் உன் வகுப்பு

உண்மையான தேவையை புரிந்து

அடையலாம் தேவையானதை நிதானமாக


வாழ்வதற்க்காக தேவையை கொடுத்துள்ளான்

தேவை எதுவென தெரியாமல்

வருந்தும் இந்த மனிதருக்கு

தேவையை புரியவைக்கும் குருவே


கடவுளுக்கும் நமசிவாயத்திற்க்கும் தெய்வத்திற்க்கும்

மும்மூர்த்திகளுக்கும் கிருஷ்ணருக்கும் முருகருக்கும் 

இதிகாச புராணங்களுக்கும் எனக்கு

புரியும்படி விளக்கிய குருவே


எங்கும்நிறைந்த வெட்டவெளியே நன்றி

அனைத்தையும் ஆடவைக்கும் இசையே 

கொண்டாட்டமாக ஆடி ஆடவைக்கும்

பசுமைஇல்ல சிவயோகியே நன்றி.





Saturday, September 5, 2020

குரு வணக்கம்

எங்கும் நிறைந்த இறைவா போற்றி

எல்லா புரிதலையும் தரும் சிவயோகியே போற்றி

கடவுளை, என்னை உணர உபதேச பயிற்சி

நான் யார் என உணர்ந்து ஆனந்தமாக வாழ ஆனந்த வாழ்வு 

காலத்தை உணர்ந்து, மதித்து செயல்பட காலம் உன் கையில்

 எனது தேவைகளை புரிந்து நிமிர்ந்து வாழ நிமிர்ந்து நில்

அனைவரோடும் அன்போடு கருணையோடு பழக பார்த்து பழகு

தேவைகளை அடைய ஊக்கமாக செயல்பட ஊக்கமது கையிடேல்

இத்தனை வகுப்புகளிளும் கலந்துகொண்டு புதிய புதிய புரிதலை தந்த இறைவா நன்றி

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என அள்ளித்தரும் வள்ளளே குருவே சிவயோகியே நன்றி

Thursday, April 9, 2020

தமிழ் ஓர் அதிசயம்

தமிழ் ஓர் அதிசயம்

கடவுள் ஓர் அதிசயம்
நம்பும் மனிதனை படைத்து
நம்பாத மனிதனையும் காத்து
அதைஉணர்ந்த தெய்வமனிதனையும் அழிக்கின்றது

குருசிவயோகி ஓர் அதிசயம்
உண்மையை உணர்த்தும் மனிதர்
உபதேசம் அருளிய தெய்வம்
மனிதனை தெய்வமாக்கும் கடவுள்

தமிழ்மொழி ஓர் அதிசயம்
கடவுளை உணர்த்தும் பார்கடல்
முன்னோர் அருளிய அமுதம்
படித்தால் அடையலாம் ஞானம்

திருவள்ளுவர் ஓர் அதிசயம்
அறத்தை படித்து மனிதனாகி
பொருளை சேர்த்து நன்றாகவாழ்ந்து
இன்பமாக கொண்டாடினாள் கடவுளாகலாம்

கம்பர் ஓர் அதிசயம்
மறை பொருளான ராமனை
மெய் பொருளான சீதை
பார்க்க உதவுவாள் நீலமாலை

தமிழ்நூலோர் ஓர் அதிசயம்
சாதாரணமாக படித்தால் கதையாக
ஆராய்ந்து படித்தால் அறமாக
கடவுளை காணவழி மறைவாக.

Friday, March 27, 2020

கடவுள் (நான் புரிந்துகொண்ட)

கடவுள் (நான் புரிந்துகொண்ட)

நன்றி நன்றி கடவுளே
கடவுளை உணர்த்த வந்த
குருவே தெய்வமே நன்றி
குருவே சிவயோகியே நன்றி

என்தாய் தந்தையே நன்றி
என்மனைவி குழந்தைகளே நன்றி
உலகிளுள்ள அனைவருக்கும் நன்றி
உலகத்திலுள்ள அனைத்திற்க்கும் நன்றி

கொடுத்தாய் உபதேச யோகநெறியை
செய்ய செய்ய தெளிகிறதையா
மனம் உடல் உயிராய்
கடவுள் புரிந்ததே குருவே

யோககுடில் அதுநான் குடி
கொண்டிருக்கும் கோவிலான உடலே
யோககுடிலில் மனம்வைத்து யோகம்
செய்ய உணரலாம் கடவுளை

புத்தர் சொன்ன சூன்யத்தை
வள்ளுவர் சொன்ன பகவானை
சித்தர்கள் சொன்ன வெளியை
உணரநீ காட்டினாய் வழியை

எங்கும் நிறைந்த இறைவனென
செயலுக்கு கர்த்தாவான கர்த்தறென
நிகரற்றதாய் இருக்கும் அல்லாவென
பெயர்தான் வெவ்வேறு ஒன்றே கடவுள்

கடவுள் உள்ளது அனைத்துமாய்
மனிதன் உள்ளே உயிராய்
மனிதனுக்கு வெளியே வெளியாய்
பஞ்சபூதமாய் உள்ளது நமசிவாயம்

கடவுளை உணர சிலைகளாக
வடித்தே வைத்துள்ளார் சிந்திக்க
புராண இதிகாச கதைகளாக
எழுதியும் வைத்துள்ளார் சிந்திக்க

முருகனிடம் உள்ள வேலும்
மயிலும் பாம்பும் சேவலும்
கண்ணணின் சங்கு சக்கரம்
கருடன் பார்க்கபார்க்க தெரியுமே

தக்கன்வேள்வி மார்க்கண்டேய கதை
இலிங்கத்தில் கண்ணுக்க கால்வைத்து
கண்ணை கொடுத்த கண்ணப்பனாய்
மாறினால் உணரலாமே சிவனை

நீல நிறம் சிவன்
நீல நிறம் கிருஷ்ணர்
நீல நிறம் ஆகாயம்
நீல நிறம் மயில்

ஐம்பூதமும் உலகில் மனிதன்
ஆறாம் அறிவால் சிந்தித்து
ஏழு சக்கரத்திலும் ஓதினால்
எட்டா கடவுளை எட்டலாம்

சைவம் அசைவம் உணவெனயுள்ள
இந்தஉலகத்தில் நானும் கடவுளும்
ஒன்றென்றால் சைவம் நானும்
கடவுளும் வெவ்வேறெனில் அசைவம்

யோககுடில் மூலம் உபதேசயோக
நெறியை சொல்லிதந்த சிவயோகியே
உணர்த்தி கொண்டிருக்கும் குருவே
உலகிலுள்ள அனைவரும் உணரட்டும்

யோககுடிலே வாழ்க வாழ்க
உலகிலுள்ள அனைவரும் வாழ்க
குருவே சிவயோகியே போற்றி
அனைத்துமாயிருக்கும் இறையே போற்றி!