Friday, March 27, 2020

கடவுள் (நான் புரிந்துகொண்ட)

கடவுள் (நான் புரிந்துகொண்ட)

நன்றி நன்றி கடவுளே
கடவுளை உணர்த்த வந்த
குருவே தெய்வமே நன்றி
குருவே சிவயோகியே நன்றி

என்தாய் தந்தையே நன்றி
என்மனைவி குழந்தைகளே நன்றி
உலகிளுள்ள அனைவருக்கும் நன்றி
உலகத்திலுள்ள அனைத்திற்க்கும் நன்றி

கொடுத்தாய் உபதேச யோகநெறியை
செய்ய செய்ய தெளிகிறதையா
மனம் உடல் உயிராய்
கடவுள் புரிந்ததே குருவே

யோககுடில் அதுநான் குடி
கொண்டிருக்கும் கோவிலான உடலே
யோககுடிலில் மனம்வைத்து யோகம்
செய்ய உணரலாம் கடவுளை

புத்தர் சொன்ன சூன்யத்தை
வள்ளுவர் சொன்ன பகவானை
சித்தர்கள் சொன்ன வெளியை
உணரநீ காட்டினாய் வழியை

எங்கும் நிறைந்த இறைவனென
செயலுக்கு கர்த்தாவான கர்த்தறென
நிகரற்றதாய் இருக்கும் அல்லாவென
பெயர்தான் வெவ்வேறு ஒன்றே கடவுள்

கடவுள் உள்ளது அனைத்துமாய்
மனிதன் உள்ளே உயிராய்
மனிதனுக்கு வெளியே வெளியாய்
பஞ்சபூதமாய் உள்ளது நமசிவாயம்

கடவுளை உணர சிலைகளாக
வடித்தே வைத்துள்ளார் சிந்திக்க
புராண இதிகாச கதைகளாக
எழுதியும் வைத்துள்ளார் சிந்திக்க

முருகனிடம் உள்ள வேலும்
மயிலும் பாம்பும் சேவலும்
கண்ணணின் சங்கு சக்கரம்
கருடன் பார்க்கபார்க்க தெரியுமே

தக்கன்வேள்வி மார்க்கண்டேய கதை
இலிங்கத்தில் கண்ணுக்க கால்வைத்து
கண்ணை கொடுத்த கண்ணப்பனாய்
மாறினால் உணரலாமே சிவனை

நீல நிறம் சிவன்
நீல நிறம் கிருஷ்ணர்
நீல நிறம் ஆகாயம்
நீல நிறம் மயில்

ஐம்பூதமும் உலகில் மனிதன்
ஆறாம் அறிவால் சிந்தித்து
ஏழு சக்கரத்திலும் ஓதினால்
எட்டா கடவுளை எட்டலாம்

சைவம் அசைவம் உணவெனயுள்ள
இந்தஉலகத்தில் நானும் கடவுளும்
ஒன்றென்றால் சைவம் நானும்
கடவுளும் வெவ்வேறெனில் அசைவம்

யோககுடில் மூலம் உபதேசயோக
நெறியை சொல்லிதந்த சிவயோகியே
உணர்த்தி கொண்டிருக்கும் குருவே
உலகிலுள்ள அனைவரும் உணரட்டும்

யோககுடிலே வாழ்க வாழ்க
உலகிலுள்ள அனைவரும் வாழ்க
குருவே சிவயோகியே போற்றி
அனைத்துமாயிருக்கும் இறையே போற்றி!





No comments: